Building Business. Enriching Lives.

வாகன்-கிங்-அரோரா ஒன்டாரியோ ஆரம்ப வருடங்கள் நிலையம்

Vaughan-King-Aurora Ontario Early Years Centres



0 – 6 வரையான வயதுடைய பிள்ளைகளைக் கொண்ட குடும்பங்களுக்கு வாகன்-கிங்-அரோரா ஒன்டாரியோ ஆரம்ப வருடங்கள் நிலையம் (Vaughan-King-Aurora Ontario Early Years Centres), ஆரம்பக் கல்வி மற்றும் பிள்ளை வளர்ப்புத் திட்டங்களை வழங்குகிறது.

இளம் பிள்ளைகளுக்கும் அவர்களுடைய குடும்பங்களுக்கும், பதிவுசெய்வதற்கு முன்னான மற்றும் பதிவுசெய்யப்படாத திட்டங்கள் உட்பட பலதரப்பட்ட சேவைகளை, இந்த சமூக அடிப்படையிலான நிலையங்கள் நடத்துகின்றன. சம்பந்தப்படக்கூடிய பிரச்சனைகள், ஆரம்ப எழுத்தறிவு, குறிப்பிட்ட வயதிற்கான வளர்ச்சி மைல்கற்கள் மற்றும் சமுதாயமயமாக்கல் பற்றிய பெறுமதிவாய்ந்த ஆதரவளிக்கும் தகவல்களை ஆரம்ப வருட தொழில் நெறிஞர்கள் வழங்குகிறார்கள்.

தங்கள் பிள்ளைகளின் மிக முக்கியமான ஆசிரியராக தாங்களே இருப்பதற்கும் பிள்ளை வளர்ப்பில் நீண்டகால திறமைகளை உருவாக்கிக்கொள்வதற்கும் பெற்றோர்களுக்கு கற்பிக்கப்படுகிறது. மேலும், இந்த நிலையங்கள் நல்ல சமூகத்தாக்கங்களை சமுதாயத்திற்குள் அதிகரிக்கும் முகமாக விரிவாக்கப்பட்ட சேவைகளை வழங்குவதற்கு வேறு அமைப்புகளோடு கூட்டுச் சேர்ந்துள்ளன.

இந்த முக்கியமான சேவைகளை நாங்கள் சமூகத்திற்கு வழங்குவதை சாத்தியமாக்கும் ஒன்டாரியோ பிள்ளைகள் மற்றும் இளைஞர் சேவைகள் அமைச்சு (Ontario Ministry of Children and Youth Services) வின் தொடர்ச்சியான ஆதரவை நாங்கள் நன்றியுடன் தெரியப்படுத்துகிறோம்.

எங்கள் Early Years Centre அமைவிடங்கள்:

Woodbridge
140 Woodbridge Ave, Unit E-400
Woodbridge, Ontario, L4L 4K9
தொலைபேசி: 905-856-5511

Aurora
40 Engelhard Drive, Unit 1
Aurora, Ontario, L4G 6X6
தொலைபேசி: 905-751-1011
 

உங்கள் சமூகம் முழுவதிலும் பல்வகைப்பட்ட அவுட்ரீச் திட்டங்களையும் நாங்கள் வழங்குகிறோம். என்னென்ன திட்டங்களை நாங்கள் இப்போது வழங்குகிறோம் என்பதை அறிந்துகொள்ள தயவுசெய்து எங்கள் இணையத்தளப் பக்கங்களில் ஒன்றை தொடர்புகொள்ளவும் அல்லது 1-866-404-2077 என்ற இலவச எண்ணை அழைக்கவும்.

ஆங்கிலத்தில் மாத்திரம், எங்கள் சேவைகளைப் பற்றி மேலதிக தகவல்களுக்கு இங்கே சொடுக்கவும்