யோர்க் பிராந்தியத்தின் சிறுவர் மற்றும் சிறுமிகள் மன்றம்
The Boys and Girls Club of York Region
பிள்ளைகளும் இளைஞர்களும் புதிய வாய்ப்புகளை அனுபவிக்கவும், தடைகளை மேற்கொள்ளவும், நல்ல உறவுகளை உருவாக்கிக்கொள்ளவும், தன்நம்பிக்கை மற்றும் வாழ்க்கைத் திறன்களை வளர்த்துக்கொள்ளவும், பாதுகாப்பானதும் ஆதரவானதுமான ஒரு இடத்தை வழங்குவதே கனடாவில் உள்ள அனைத்து சிறுவர் மற்றும் சிறுமிகள் மன்றங்களின் (Boys and Girls Clubs) குறிக்கோளாகும்.
15 வருடங்களுக்கும் மேலாக, பிள்ளை மற்றும் இளைஞர்களுக்கான சேவைகளை எங்கள் அனைத்து சமுதாயங்களுக்கும் வழங்குவதில் யோர்க் பிராந்தியத்தின் சிறுவர் மற்றும் சிறுமிகள் மன்றம் (Boys & Girls Club of York Region) முன்னோடியாக திகழ்கிறது. எங்கள் மிகச் சிறந்த திட்டங்களுக்காக தேசீய அங்கீகாரம் பெற்று, யோக் பிராந்தியம் முழுவதிலும் உள்ள பிள்ளைகள், இளைஞர் மற்றும் குடும்பங்களுக்கு பெறுமதிவாய்ந்த வாழ்க்கை அனுபவங்களையும் ஆரோக்கியமான உறவுகளையும் வழங்கும் பங்கை நாங்கள் தொடருகின்றோம்.
ஒவ்வொரு பிள்ளைக்குள்ளும் இருக்கும் நல்ல ஆற்றல்களில் உள்ள நம்பிக்கையை அடித்தளமாகக் கொண்டுதான் சிறுவர் மற்றும் சிறுமிகள் மன்றங்கள் (Boys & Girls Clubs) உருவாக்கப்பட்டுள்ளன. பிள்ளைப்பருவ வளர்ச்சியின் முக்கியமான காலகட்டத்தில் சுய கெளரவத்தைக் கட்டியெழுப்புவதற்காகவும் வாழ்க்கைக்கான நல்ல விழுமியங்கள் மற்றும் திறமைகளை வளர்த்துக்கொள்வதை ஊக்கப்படுத்துவதற்காகவும் கரிசனையுள்ள பெரியோர் உதவுகிறார்கள்.
தேசீய அளவில், வருடந்தோறும் 150,000 க்கும் அதிகமான இளைஞர்களுக்கு, சிறுவர் மற்றும் சிறுமிகள் மன்றங்கள் (Boys and Girls Clubs) சேவைசெய்கின்றன. 150 வருடங்களுக்கும் அதிகமான அனுபவத்துடன், பல தலைமுறைகளாக பிள்ளைகள், இளைஞர் மற்றும் குடும்பங்களுக்கு, பாடசாலைக்கு முன் மற்றும் பின்னான வளமூட்டும் திட்டங்களை வழங்குவதில் சிறப்புப்பெற்ற, இளைஞர்களை சேவிக்கும் முதன்மையான கனேடிய அமைப்பாக கனடாவின் சிறுவர் மற்றும் சிறுமிகள் மன்றங்கள் (Boys and Girls Clubs of Canada) திகழ்கின்றன.
அனைத்துப் பிள்ளைகளும் வரவேற்கப்படுகிறார்கள். அங்கத்துவராவதற்கான கட்டணம் எல்லாப் பிள்ளைகள் மற்றும் குடும்பங்களாலும் செலுத்தக்கூடியதாகும். தேவைப்பட்டால் கட்டண விலக்கு கிடைக்கப்பெறும்.
யோர்க் பிராந்தியத்தின் சிறுவர் மற்றும் சிறுமிகள் மன்றத்தின் (Boys and Girls Club of York Region) இணையத்தளத்திற்குச் செல்வதற்கு ஆங்கிலத்தில் (in English) இங்கே சொடுக்கவும்.
கனடா சிறுவர் மற்றும் சிறுமிகள் மன்றங்களின் (Boys and Girls Club of Canada) இணையத்தளத்திற்குச் செல்வதற்கு ஆங்கிலத்தில் (in English) இங்கே சொடுக்கவும்






